ஆக்கம்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை ~ dushi.pillai@gmail.com ~
தமிழ் வடிவம்: க. தி. குமாரன்
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஞாபகார்த்த கண்காட்சி, பெப்ரவரி 6ஆம் திததி கொழும்பு, தேசிய கலா பவனத்தில்
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் மூத்த புதல்வரும், குடியுரிமை செயற்பாட்டாளருமாகிய மூன்றாம்
மார்ட்டின் லூதர் கிங்கினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அன்பு
பட்டை போடப் போடத்தான்
பள பளக்கும் வைரமே
மெருகு கொடுக்கக் கொடுக்கத்தான்
மினு மினுக்கும் தங்கமே
அரும்பு மலர மலரத்தான்
அளிக்கும் மணத்தை மலருமே
அன்பு பெருகப் பெருகத்தான்
அமைதி அடையும் உலகமே -குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா (1922-1989)
மே மாதம் 1963 இல், பேர்மின்ஹாம், அலபாமா- சென் சென் லூக்ஸ் பப்டிஸ்ட் தேவாலயத்தில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆற்றிய உரை.
ரோசா பார்க்ஸ், தனது 42 ஆவது வயதில் டிசம்பர் 1, 1955 ஆம் அண்டு அலபாமா மாநிலத்தில் பேருந்துகளில் வெள்ளயினதவருக்கு இருக்கை முதலுரிமை வழங்கப்படுவதை எதிர்த்து தனது ஆசனத்தை வழங்க மறுத்தார்.
2005 அக்டோபரில் ரோசா பார்க்ஸ் மறைந்த போது என்.பி.ஆர். வானொலியில் ரோசா பார்க்கின் முன்னைய செவ்வியையும் உள்ளடக்கி ஒலிபரப்பான நிகழ்ச்சி
ஜனவரி 19, 2009 தினத்தன்று வண. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களின் 80ஆவது அகவை பூர்த்தியின் அடுத்த தினம், ஜனவரி 20 ஆம் திகதி, அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவியேற்றார். இதனை குறிக்குமுகமாக என்.பி.ஆர். வானொலி, வண. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களின் "எனது இன்றைய கனவு" உரையினை ஒலிபரப்பியது.